Saturday, November 20, 2010

வெண்ணிலவு

வெண்ணிலவே! தண்நிலவே! வானம் தன்னில்
விடியவிடிய உலாவந்து முகத்தைக் காட்டு;
கண்ணான எம்வீட்டு மழலைப்  பூக்கள்
களிப்புடனே சோறுண்ண முகத்தைக் காட்டு;
பெண்ணவளின் முகவனத்தில் மெருகை யூட்ட
பிரித்தளித்து உன்பொலிவில் மங்கி னாயோ?
விண்ணில்உன் பிறை,நிறையாம் சிரிப்பைக் கண்டு
பித்தனான கவிஞன்தன் கவிதைப் பூவே!

7 comments:

  1. மழலைகளுக்காய் விடியவிடிய நிலவை அழைப்பது அருமை :)

    ReplyDelete
  2. நேற்று நான் வானில் கண்ட பெளர்ணமியின் அழகை கண்மூடி தங்களின் கவிதை வரிகளின் வரியிலும் ரசிக்கிறேன்...

    தொடர்ந்து உங்களுடைய எல்லா கவிதைகளையும் படிக்கும் ஆர்வத்துடன் நாங்கள்...

    ReplyDelete
  3. கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

    ReplyDelete
  5. @malarvizhi-myfavourites,

    இந்த அக்கா யாரு? ரொம்ப நாளா ஆள், விலாசம் இல்லாமல்... இப்ப திடீரென்று... பின்னூட்டம் இங்கே இடுவது...

    ReplyDelete
  6. ரொம்ப அருமையாய் எழுதியிருக்கிங்க!பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அருமையான வரிகள் ........

    தொடருங்கள் தொடர்ந்து வருவோம் ..........

    ReplyDelete